டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் சென்னையில் கனெக்டட் டெக்னாலஜி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகியிருக்கும் “டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்” ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது!!

டிவிஎஸ் மோட்டர்  நிறுவனம் சென்னையில் கனெக்டட் டெக்னாலஜி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகியிருக்கும் “டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்” ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது!!
டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் சென்னையில் கனெக்டட் டெக்னாலஜி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகியிருக்கும் “டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்” ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது!!

டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் சென்னையில் கனெக்டட் டெக்னாலஜி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகியிருக்கும் “டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்” ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது!!

 

அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான ‘டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட்’

[TVS SmartXonnect], மேம்பட்ட எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்ன் [electric drivetrain] மற்றும் லி-அயன் பேட்டரிகள் [Li-ion batteries] ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்எக்ஸ்ஹோம் சார்ஜிங் யூனிட் [SmartXHome charging unit] மற்றும் ‘டிவிஎஸ் ஐக்யூப்’ மொபைல் அப்ளிகேஷனின் [TVS iQube app] மூலம் பப்ளிக் சார்ஜிங்கை இணைக்கும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘டிவிஎஸ் ஐக்யூப்’ [TVS iQube] எலெக்ட்ரிக் வாகனத்தை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யலாம். மேலும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், செளகரியத்தையும் மனதில் கொண்டு, நேரடி மனித தொடர்பில்லாத, விநியோகத்தை உறுத்திப்படுத்துகிறது டிவிஎஸ் மோட்டர் நிறுவனம்.

சென்னை, ஜூன் 17, 2021: உலகளவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக புகழ்பெற்றிருக்கும் டிவிஎஸ் மோட்டர் நிறுவனம், சென்னையில் தனது ‘டிவிஎஸ் ஐக்யூப்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் [TVS iQube Electric scooter]-ஐ அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்தது. ‘டிவிஎஸ் ஐக்யூப்’ எலக்ட்ரிக், சுற்றுசூழலுக்கு உகந்த ஒரு பசுமை இருசக்கர வாகனமாகும். மேலும் இவ்வாகனம், கனெக்டட் தொழில்நுட்பம் உடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், நகர்ப்புற அன்றாட பயணங்களுக்கு உற்சாகமளிக்கும் தயாரிப்பாக இருப்பதோடு, மேம்பட்ட எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்ன் [advanced electric drivetrain] மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்ம் [next-gen TVS SmartXonnect platform] என அபாரமான ஆற்றல்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகி இருக்கிறது.

‘டிவிஎஸ் ஐக்யூப்’ அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கே.என். ராதாகிருஷ்ணன் [Shri. K.N. Radhakrishnan, Director & Chief Executive Officer, TVS Motor Company] கூறுகையில், “டிவிஎஸ் மோட்டர் 

நிறுவனம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இந்தியா முன்னேற்றம் கண்டு வரும் நேரத்தில், ​​அதிகரித்து வரும் அதன் அன்றாட போக்குவரத்து தீர்வுகள் அனுபவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாபெரும் மாற்றத்தை இந்தியாவின் இளையதலைமுறையினரை விட வேறெங்கும் யாராலும் மிகக் கூர்மையாக உணர்ந்திருக்க முடியாது. இந்தியாவின் ‘பசுமை மற்றும் இணைப்புத் தொழில்நுட்ப தலைமுறை’யாக திகழும்’ இன்றைய இளைஞர்கள் [‘Green & Connected’ youth of India] மீதான எங்கள் கவனம், டிவிஎஸ் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளின் முதன்மையான அம்சமாக இருந்து வருகிறது.. டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் என்பது ஒரு மேம்பட்ட எலெக்ட்ரிக் டிரைவ் ட்ரெய்ன் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்மின் [advanced electric drivetrain & next-gen TVS SmartXonnect] மிகச் சிறந்த கலவையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பெங்களூரு மற்றும் டெல்லியில் கிடைத்திருக்கும் அமோகமான வரவேற்பிற்கு பிறகு, எங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இங்கு எங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அபரிதமான வரவேற்புடன், இன்னும் புதிய உயரங்களைத் தொடுவோம் என உறுதியாக நம்புகிறோம். டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் விநியோக வழிமுறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான இயங்குதளங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த அம்சமானது, வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்திற்கான முன்பதிவையும், பணம் செலுத்துவதையும் கூட ஆன்லைன்னிலேயே எளிய முறையில் மேற்கொள்ள உதவுவதோடு, நேரடி மனிதத் தொடர்பு இல்லாமல் வாகன விநியோகத்தை மேற்கொள்ளும் அருமையான வாய்ப்புகளையும் அளிக்கிறது.” என்றார்.

அபாரமான செயல்திறன் 

’டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்’கில் ஆற்றல்மிக்க 4.4 கிலோவாட் மின்சார மோட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது, இது அதிக சக்தி மற்றும் அபாரமான செயல்திறன் இரண்டையும் எந்தவிதமான ட்ரான்ஸ்மிஷன் இழப்பும் இல்லாமல் வழங்குகிறது. ’டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்’ ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கி.மீ ஆகும். முழு சார்ஜ் செய்தால் 75 கி.மீ. வரை பயணிக்கலாம். மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4.2 வினாடிகளில் 0 முதல் 40 கி.மீ வேக டார்க்கை அளிக்கிறது.

 உயர்ந்த கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் தனியுரிம அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்ம் [TVS SmartXonnect platform], மேம்பட்ட டிஎஃப்டி கிளஸ்டர் [advanced TFT cluster] மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் மொபைல் அப்ளிகேஷன் [TVS iQube app] ஆகிய நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷனானது, ஜியோ-ஃபென்சிங் [Geo-fencing], ரிமோட் பேட்டரி சார்ஜ் ஸ்டேட்டஸ் [remote battery charge status], நேவிகேஷன் உதவி [navigation assist], கடைசியாக வாகனத்தை நிறுத்திய இடம் [last park location] மற்றும் மொபைல் ஃபோனிற்கு வரும் அழைப்பு எச்சரிக்கைகள் / எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் [incoming call alerts/SMS alerts] போன்ற பல அம்சங்களை வழங்குகிறது.

 

 

ஈடுஇணையற்ற வசதி மற்றும் செளகரியங்களுக்கான நவீன அம்சங்கள்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்’ ஸ்கூட்டரானது, க்யூ-பார்க் அசிஸ்ட் [Q-park assist], மல்டி-செலக்ட் எகனாமி மற்றும் பவர் மோட் [multi-select economy and power mode], டே & நைட் டிஸ்ப்ளே [day and night display], ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் [regenerative braking] மற்றும் சத்தமில்லாத மற்றும் செளகரியமான பயண அனுபவம் உள்ளிட்ட இன்னும் பல புதுமையான அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

அசத்தலான ஸ்டைல்

கண்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அருமையான வெள்ளை நிறத்தில், இன்றைய சமகால வாழ்க்கைப் பாணியைப் பிரதிபலிக்கும் விதத்தில் அட்டகாசமாக ஸ்டைலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது ’டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்’ மேலும் அழகியலின் தயாரிப்பாக, நுட்பமான மற்றும் செயல்பாடு மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், க்ரிஸ்டல் க்ளியர் எல்.இ.டி ஹெட்லேம்ப்கள் [crystal-clear LED headlamps], முழுவதும் எல்.இ.டி யினால் வடிவமைக்கப்பட்ட டெயில் விளக்குகள் [all-LED tail lamps] மற்றும் ஒரு கண்களைக் கவரும் வகையில் ஒளிரும் லோகோ [illuminating logo] உடன் கம்பீரமாக தோற்றத்தைக் கொடுக்கிறது  

வாங்குவதற்கு முன்பாக டெஸ்ட் ரைடு மற்றும் ஜிட்டல் முன்பதிவு கிடைக்கும் வாய்ப்புகள்

’டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்’கை அதன் வலைத்தளத்தின் மூலம் 5,000 ரூபாய் முன் பதிவு தொகையாக செலுத்தி முன்பதிவை மேற்கொள்ள முடியும். இதைத் தொடர்ந்து முழுவதும் வெளிப்படையான டிஜிட்டல் அடிப்படையிலான வாகனம் வாங்கும் அனுபவத்தை வழங்குகிறது டிவிஎஸ் மோட்டர் நிறுவனம். வாகனம் வாங்குவது முதல் அதற்கான வாடிக்கையாளர் சேவை வரை அனைத்திற்கும் உதவும் வகையில், ஒரு ப்ரத்யேகமான வாடிக்கையாளர் உறவு உதவி பிரிவு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. டிவிஎஸ் க்ரெடிட் வழங்கும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்களையும் வாடிக்கையாளர் பெறலாம். டிவிஎஸ் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் செளகரியத்தையும் கருத்தில் கொண்டு வாகனங்களை விநியோகம் செய்வதை நேரடி மனித தொடர்பு இல்லாமல் வழங்கும் வசதியை தொடங்கியிருக்கிறது.

 

சுற்றுச்சூழல் சார்ஜ் ஆதரவு 

டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சார்ஜிங் வாய்ப்புகளுடன் கூடிய விரிவான சார்ஜிங் சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஸ்மார்ட்எக்ஸ்ஹோம் [SmartXHome] சார்ஜிங் வசதியைப் பெறலாம், இந்த சார்ஜிங் செய்யும் வசதியானது ப்ளூடூத் இணைப்புடன் [BlueTooth connectivity], லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் மற்றும் ஆர்.எஃப்.ஐ.டி செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு [RFID enabled security] ஆகியவற்றுடன் வீட்டிலேயே சார்ஜ் செய்யும் ப்ரத்யேக வசதியை வழங்குகிறது. தற்போது, டிவிஎஸ் ஐக்யூப் ​​எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான சார்ஜிங் யூனிட்கள் சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், டிவிஎஸ் நிறுவனம் நகரம் முழுவதும் நெட்வொர்க்கை மேலும் பரவலாக விரிவுபடுத்துவதன் மூலம் மாபெரும் பப்ளிக் சார்ஜிங் சூழலை உருவாக்கி வருகிறது.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில், இன்று முதல் கிடைக்கும். இதன் ஆன் – ரோட் விலை र. 1,15,218 ஆகும் [FAME II மானியத்திற்கு பிறகு]

மேலும் விவரங்களுக்கு இணையத்தில் பார்க்க https://www.tvsmotor.com/iqube

 

டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் பற்றி….:

டிவிஎஸ் மோட்டர் நிறுவனம், உலகளவில் புகழ்பெற்ற முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் 8.5 பில்லியன் டாலர் மதிப்புடைய டிவிஎஸ் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். போக்குவரத்து அம்சங்கள் வாயிலாக பெரும் வளர்ச்சி பாதையில் வெற்றி பெற முடியுமென நம்பிக்கை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கை, நன் மதிப்பு, வாடிக்கையாளர்களின் ஆதரவு, ஆர்வம், மற்றும் துல்லியத் தன்மை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நவீன தயாரிப்புகளை மிக உயர்ந்த தரத்தில், புதிய தொழில் நுட்பத்தில் நீடித்த மற்றும் நிலைத்த தன்மையுடனான நடைமுறைகளின் அடிப்படையில் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள எங்களது மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையையும் அனுபத்தையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒட்டுமொத்த தர மேலாண்மைக்காக (டிக்யூஎம்) வழங்கப்படும் மிக உயர்ந்த மதிப்பு மிக்க டெமிங் பரிசை வென்ற ஒரே நிறுவனம் டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் மட்டுமே. டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகள் சம்பந்தப்பட்ட அந்தந்த பிரிவுகளில் முன்னணியில் இருப்பது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஜே.டி. பவர் ஐக்யூஎஸ் மற்றும் அப்பீல் ஆய்வுகளில் [J.D. Power IQS & APEAL surveys] தெரிய வந்துள்ளது. ஜேடி பவர் – திருப்திகரமான வாடிக்கையாளர் சேவை (ஜேடி பவர் கஸ்டமர் சர்வீஸ் சேட்டிஸ்ஃபேக்ஷன் - J.D. Power Customer Service Satisfaction Survey) ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளாக டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.

 

  மேலும் விவரங்களுக்கு www.tvsmotor.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

 

ஊடக விசாரணைகளுக்கு….

Varghese M Thomas / KS Harini: vm.thomas@tvsmotor.com / ks.harini@tvsmotor.com