புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மாதம் 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென மாயமானர். இதனையடுத்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், 5ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து சிறுமியின் உடலை சடலமாக போலீசார் மீட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறுமி உடலை பிரதே பரிசோதனை செய்த ஜிப்மர் மருத்துவமனை அதன் அறிக்கையினை போலீசாருக்கு அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், நாளை முத்தையால்பேட்டை போலீசார் புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் சிறுமி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகளுக்கும் விரைவில் நீதிபதி தீர்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.