“அண்ணா மேம்பாலம் 50”

“அண்ணா மேம்பாலம் 50”
“அண்ணா மேம்பாலம் 50”
“அண்ணா மேம்பாலம் 50”
“அண்ணா மேம்பாலம் 50”
“அண்ணா மேம்பாலம் 50”

“அண்ணா மேம்பாலம் 50”

சென்னைஅண்ணா மேம்பாலத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் புதியதலைமுறை மற்றும் புதுயுகம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளன.

 

தமிழகத்தின் முதல் மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், மாபெரும் நிகழ்ச்சியை புதியதலைமுறை தொலைக்காட்சி  ஏற்பாடு செய்யதிருந்தது. .  ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் அண்ணா மேம்பாலத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி புதியதலைமுறை மற்றும் புதுயுகம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளது.

 

கடந்த 1973ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையில் நிறுவப்பட்ட அண்ணா மேம்பாலம் தமிழகத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது.கடந்த ஐம்பது 

ஆண்டுகளாக, சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அண்ணா மேம்பாலம், முன்னேற்றம் மற்றும் இணைப்பின் அடையாளமாக உள்ளது.

 

அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள அழகிய செம்மொழி பூங்காவில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன், சென்னை மாநகர ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், தொழிலதிபர்கள் அபிராமி ராமநாதன், நல்லி குப்புசாமி, மற்றும் VKT பாலன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அண்ணா மேம்பாலம் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

 

அண்ணா மேம்பாலத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கதிர் உட்பட புகழ்பெற்ற கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேம்பாலத்தை வடிவமைத்த கிழக்கு கடற்கரை கட்டுமானம் மற்றும் தொழில்துறை கழகத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பு நினைவு கூறப்பட்டது. கிழக்கு கடற்கரை கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.டி.எம். அஹமது முஸ்தாப் மற்றும் அண்ணா மேம்பாலம் கட்டுமானத்திற்காக இரண்டு 

ஆண்டுகளை அர்ப்பணித்த ஓய்வு பெற்ற பொறியாளர் நடராஜன் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர்.

 

அண்ணா மேம்பாலத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் பிரத்யேக காட்சிகளை புதியதலைமுறை தொலைக்காட்சியில்  வரும் ஜூலை 15 சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கும், புதுயுகம் தொலைக்காட்சியில் ஜூலை 16, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கும்  ஒளிபரப்பப்பட உள்ளது .