காவலன் செயலி அறிமுக விழா
வடபழனி வளாக எஸ்.ஆர். எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 27/01/2020 அன்று நடைபெற்ற காவலன் செயலி அறிமுக விழாவில் இயக்குநர் முனைவர் சுப்புராம்,புலத்தலைவர் முனைவர் அனந்த பத்மனாபன், திநகர் காவல்துறை இணை ஆணையர் அசோக்குமார், வடபழனி உதவி ஆணையர் ஆரோக்கியப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 350- க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துகொண்டனர். மேலும், இவ்விழாவில் காவலன் செயலி எப்படியெல்லாம் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் ஆகியோரைப் பாதுகாக்கின்றன என்பதை விளக்கிக் கூறினர். ஒரு மணிநேரம் நடைபெற்ற இவ்விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.