சின்னசேலம் வன்முறை வழக்கு- கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 108 பேர் இன்று ஆஜர்

சின்னசேலம் வன்முறை வழக்கு- கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 108 பேர் இன்று ஆஜர்
சின்னசேலம் வன்முறை வழக்கு- கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 108 பேர் இன்று ஆஜர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நேற்று கலவரம் வெடித்தது. இதில் போலீஸ் வாகனம் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி கலவரம் கட்டுக்குள் வந்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 108 பேர் இன்று கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை போலீசார் 4 வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர். மீதமுள்ளவர்கள் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மேலும் இந்த வழக்கில் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.