தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா : மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 452 பேருக்கு கொரோனா
கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,755 ஆக உயர்வு.இன்று 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 72,403 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 5 மாவட்டங்கள்
சென்னை - 452
கோவை - 141
திருப்பூர் - 110
திண்டுக்கல் - 80
ஈரோடு - 70
சென்னையில் இன்று ஒரே நாளில் 52 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்வு