FIA (நிதி உள்ளடக்க ஆலோசனை) தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு FIA வங்கி சகி – ன் உத்வேகமளிக்கும் செயற்பணி
FIA (நிதி உள்ளடக்க ஆலோசனை)
தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு FIA வங்கி சகி – ன் உத்வேகமளிக்கும் செயற்பணி
திருமதி எஸ். செல்வி என்பவர் FIA - ன் ஒரு பிசினஸ் முகவராக கடந்த 8 ஆண்டுகளாக எங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். மூத்த குடிமக்களுக்கான முதிர்வயது ஓய்வூதியங்கள் மீது இவர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். ஏறக்குறைய 1500 PMJDY கணக்குகளை மூத்த குடிமக்கள் தொடங்குவதை இவர் ஏதுவாக்கியிருக்கிறார் (இந்த கணக்குகளுள் 90% ஒவ்வொரு மாதமும் பரிவர்த்தனைகள் நடைபெறுபவையாக இருக்கின்றன. ஒரு மாதத்தில் இச்சேவைக்காக நேரில் வருகை தரும் வாடிக்கையாளர்கள் 900-க்கும் அதிகமானவர்கள் (இவர்களுள் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள்).
ஓய்வூதியமானது, பரோடா வங்கியால் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக செயல்பட இயலாதவாறு ஒரு ஊனம் இவருக்கு இருக்கின்றபோதும் சென்னை மாநகரில் 1500-க்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு திருமதி. செல்வி தற்போது சேவையாற்றி வருகிறார். நடப்பது கூட சிரமமானதாக இருக்கின்றபோதிலும் இவர் இச்சேவையை திறம்பட செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்த காலத்திலும் கூட செல்வி அவரது கடமைகளை மிக்திறமையாக செய்து வந்திருக்கிறார். செல்வியின் கணவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தபோதும் கூட, தனது கடமையைச் செய்ய செல்வி ஒருபோதும் தவறியதில்லை. வங்கிக்கணக்கு வைத்திருக்கும் முதுநிலை மூத்த குடிமக்களை திறந்தவெளிகளில் மற்றும் பொதுவிடங்களில் இவர் சந்திப்பார் மற்றும் அவர்களது ஓய்வூதியத்தொகையை இச்சந்திப்புகளின்போதே அவர்களுக்கு இவர் வினியோகிப்பார். செல்வியின் வீட்டில் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும் இவரது வாடிக்கையாளர்கள் அனைத்து அம்சங்களிலும் ஆதரவாக இருப்பதோடு, எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்வார்கள் என்பதே அவர்களோடு செல்வி கொண்டிருக்கும் நல்லுறவின் சாட்சியமாக திகழ்கிறது.
வழக்கமாக, பரிவர்த்தனைகளின் பதிவுகள் பராமரிப்பு, ரொக்க மேலாண்மை மற்றும் ஓய்வூதியதாரர்களின் கேள்விகள் மற்றும் ஐயங்களுக்கு பதிலளித்து தீர்வுகளை வழங்குவதிலுள்ள சிக்கலின் காரணமாக, ஒரு பிசினஸ் முகவருக்கு முதிர்வயது ஓய்வூதிய கணக்குகள் 500 என்ற வரம்புக்கு உட்பட்டவையாக இருக்கும். எனினும், குறித்துரைக்கப்பட்ட இந்த வரம்பைப்போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற திருமதி. செல்விக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவரது சேவையில் திருப்திகொண்டிருக்கின்ற மூத்த குடிமக்கள் வங்கிக்கணக்குகளைத் தொடங்குவதற்காக பிற ஓய்வூதியதாரர்களை இவரிடம் அனுப்பி வைப்பதே இதற்கு காரணம். இதற்கும் கூடுதலாக, அவர்களது ஓய்வூதியம் மற்றும் வங்கி தொடர்பான பிற விஷயங்களுக்கு வங்கிக்கு நேராக செல்வதை விட, இவரிடம் செல்வதையே மூத்த குடிமக்கள் விரும்புகின்றனர். வங்கிக்கு எளிதாக அவர்களால் சென்று இப்பரிவர்த்தனைகளை செய்ய இயலும் என்றபோதிலும் கூட திருமதி. செல்வியிடம் இச்சேவையைப் பெறவே அவர்கள் விரும்புகின்றனர்.
செல்வியின் மெச்சத்தகுந்த இந்த சிறப்பான பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னை, வடபழனியில் அமைந்துள்ள பரோடா வங்கியின் கிளையிலிருந்து ‘சிறந்த பிசினஸ் முகவர்’ என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவர் சேவை வழங்கி வரும் வாடிக்கையாளர்களால் ‘பொண்ணு’ (மகள்) அல்லது 'அக்கா’ (மூத்த சகோதரி) என பாசத்தோடு செல்வி அழைக்கப்படுகிறார். சமூகத்துடனான இவரது நெருங்கிய பிணைப்பை அறிந்து பாராட்டுகின்ற உள்ளூர் வட்டாட்சியரும் அரசின் நலவாழ்வு திட்டங்கள் மற்றும் கோவிட் பெருந்தொற்று பற்றிய தகவலை இவரோடு பகிர்ந்துகொள்கிறார். அரசின் திட்டங்களை தகுதியுள்ள அனைத்து நபர்களும் பெற்று பயனடைவதை ஊக்குவிக்கவும் மற்றும் அவசியமான செய்திகள் பரவலாக மக்களை சென்றடையவும் இது உதவுகிறது.
இவரது குடும்ப உறவினர்களில் பலர் வசதி வாய்ப்புடன் இருக்கின்றனர். எனினும், அவர்களிடமிருந்து அனுதாபத்தையோ, உதவியையோ பெற செல்வி விரும்புவதில்லை. உயிரோடு இருக்கின்ற நாள் வரை தனது சொந்த உழைப்பை நம்பி தனித்து செயல்படவே செல்வி விரும்புகிறார் என்பது இவரது சுயசார்பை வலுவாக சுட்டிக்காட்டுகிறது.
FIA குளோபல் குறித்து
வங்கிக் கணக்கு தொடங்குவது, பணம் மாற்றுகை, பணம் செலுத்துதல்கள், கடன், காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி உட்பட, நிதிசார் சேவைகளின் முழு தொகுப்பையும் FIA வழங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவால் செயல்படும் FINVESTA என்ற நிதிசார் சேவைகள் தளத்தை FIA கொண்டிருக்கிறது. ஆதாரவளம் குறைவான சூழ்நிலைகளில் உள்ள மக்களுக்கு சிறிய அளவிலான நிதிசார் திட்டங்களை இத்தளம் ஒருங்கிணைத்து, மறுவடிவமைப்பு செய்கிறது மற்றும் வழங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கக்கூடிய FINVESTA, வங்கி சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், கடன் வழங்கல் மற்றும் முதலீடுகள் மற்றும் காப்பீட்டின் வழியாக பாதுகாப்பு போன்ற அனைத்து நிதிசார் சேவைகளையும் ஒற்றை செயல்தள அமைவிடத்தில் வழங்குகிறது. குறைவான படிப்பறிவு உள்ள நபர்களுக்கு எளிதான மூன்றே கிளிக்குகளில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அதுவும் தாள்கள் பயன்பாடு இல்லாமல், தானியக்க முறையில் இவைகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதிலும் 700-க்கும் அதிகமான மாவட்டங்களில் பணியாற்றி வருகின்ற FIA வங்கியின் மித்ராவை தொலைதூரத்திலிருந்தே மேலாண்மை செய்ய உதவுகின்ற ஜியோ – டேகிங் என்பதும் FINVESTA தளத்தில் இடம்பெற்றிருக்கிறது.
FIA எப்படி செயலாற்றுகிறது
நாடெங்கிலும் வங்கிச் சேவைக்கான சிறு அமைவிடங்களை நிறுவ, நிதிசார் நிறுவனங்களோடு FIA கூட்டாண்மையாக செயல்படுகிறது. இந்த அவுட்லெட்கள் / அமைவிடங்கள், ஒரு சிறு வங்கி கிளைபோல செயல்படுகின்றன; ஒரு மடிக்கணினி, பயோமெட்ரிக் சாதனம் மற்றும் பிரிண்டர் போன்ற சாதனங்கள் இந்த அமைவிடத்தில் நிறுவப்பட்டுள்ளன. இணையசேவை வழியாக வங்கிகளின் மைய வங்கிச்சேவை தீர்வு அமைப்போடு நிகழ்நேர அடிப்படையில் இந்த அவுட்லெட் இணைக்கப்பட்டிருக்கிறது. வங்கிக்கணக்கு இல்லாத நபர்கள் இங்கு நேரடியாக சென்று நிகழ்நேரத்திலேயே நிதிசார் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக, பேங்க் மித்ரா (பிசினஸ் முகவர்கள்) என்ற வலையமைப்பையும் FIA கொண்டிருக்கிறது. FINVESTA செயலி வழியாக, மக்களின் வீட்டு வாசலிலேயே அனைத்து நிதிசார் சேவைகளையும் பிசினஸ் முகவர்கள் வழங்குகின்றனர்.