உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ரொமான்டிக் திரைப்படங்களான இவன் யாரென்று தெரிகிறதா மற்றும் நளனும் நந்தினியும் திரைப்படங்களை ஒளிப்பரப்பவிருக்கும் கலர்ஸ் தமிழ்

உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ரொமான்டிக் திரைப்படங்களான இவன் யாரென்று தெரிகிறதா மற்றும் நளனும் நந்தினியும் திரைப்படங்களை ஒளிப்பரப்பவிருக்கும் கலர்ஸ் தமிழ்
உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ரொமான்டிக் திரைப்படங்களான இவன் யாரென்று தெரிகிறதா மற்றும் நளனும் நந்தினியும் திரைப்படங்களை ஒளிப்பரப்பவிருக்கும் கலர்ஸ் தமிழ்

உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ரொமான்டிக் திரைப்படங்களான இவன் யாரென்று தெரிகிறதா மற்றும் நளனும் நந்தினியும் திரைப்படங்களை ஒளிப்பரப்பவிருக்கும் கலர்ஸ் தமிழ்
 
சன்டே சினி காம்போ நிகழ்ச்சியில் செப்டம்பர் 5 ஞாயிறு பிற்பகல் 1 மற்றும் 4 மணிக்கு சிறப்பான திரைப்படங்களை அனுபவித்து மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்
 
சென்னை 3 செப்டம்பர், 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், வரும் ஞாயிறு அன்று ஸ்பெஷல் பார்ட்னர் நிப்பான் பெயிண்ட் வெதர் பாண்ட் ப்ரோ உடன் இணைந்து சூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படங்கள் இரண்டை பார்வையாளர்களுக்கு வழங்க இருப்பதால் காதல் உணர்வுகளால் மனதை வருடும் வார இறுதி நாட்களுக்கு இப்போதே திட்டமிட தொடங்குங்கள். S. T. சுரேஷ் குமார் இயக்கத்தில் காதலும், உணர்ச்சிமயமான கதைக்களமும் அமைந்த இவன் யாரென்று தெரிகிறதா என்ற திரைக்காவியம் மற்றும் அதைத் தொடர்ந்து வெங்கடேசன் R இயக்கத்தில் புத்துணர்ச்சியூட்டும் ரொமான்டிக் கதையான நளனும் நந்தினியும் ஆகிய இரு திரைப்படங்கள் மூலம் பார்வையாளர்களை தன்வசப்படுத்த இந்த சேனல் தயாராக இருக்கிறது. கலர்ஸ் தமிழின் பிரபல நிகழ்ச்சியான சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக இத்திரைப்படங்கள் உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட உள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் கூடிய இந்த ரொமான்டிக் திரைப்படங்களை கண்டு ரசிக்க 2021 செப்டம்பர் 5 ஞாயிறு அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பிற்பகல் 1 மற்றும் 4 மணிக்கு டியூன் செய்ய மறந்துவிடாதீர்கள்.
 
விஷ்ணு, வர்ஷா பொல்லம்மா,  மற்றும் இஷாரா நாயர் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க S. T. சுரேஷ் குமார் இயக்கத்தில் அழகான ரொமான்டிக் கதையுடன் 2017ம் ஆண்டு இவன் யாரென்று தெரிகிறதா படம் வெளியானது. ஒரு கல்லூரி பட்டதாரியான அறிவு (விஷ்ணு நடிப்பில்), மனம் கவர்ந்த காதலி ஒருவர் வேண்டும் என்ற தீவிர தேடலில் ஈடுபடுவதை சுற்றி திரைக்கதை நகர்கிறது. காதலர் தினமான வேலன்டைன்ஸ் டே, ஒரு கேர்ள்ஃபிரெண்ட் (girlfriend) இல்லையென்று நண்பர்கள் கேலி செய்ய, முடிந்தவரை விரைவாக தனக்கென்று ஒரு கேர்ள் ஃபிரண்ட்-ஐ (girlfriend) கண்டறிவதற்கு தனக்கே ஒரு சவாலை அறிவு நிர்ணயித்துக் கொள்கிறார். அவருக்கேற்ற மிகப் பொருத்தமான காதலியை கண்டறிவதற்கான அவரது முயற்சிகளையும், போராட்டங்களையும் இத்திரைக்கதை அழகாகச் சித்தரிக்கிறது.
 
நளனும், நந்தினியும் என்ற திரைப்படம் பிரபல இயக்குநர் வெங்கடேசன் R இயக்கத்தில்  நடிகர் மைக்கேல் தங்கதுரை மற்றும் கவர்ச்சி கன்னி நந்திதா ஸ்வேதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க 2014ம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் திரைப்படமாகும். தங்களது குடும்பத்தினர் அறிவுறுத்தலை மீறி திருமணம் செய்து கொண்டு பெரு நகரத்திற்கு புலம்பெயரும் இரு இளம் காதலர்களான நளன் மற்றும் நந்தினியின் வாழ்க்கை நிகழ்வுகளை சுற்றி கதை நகர்கிறது. வேலையும் இல்லாமல், ஆதரவளிப்பதற்கு யாருமில்லாமல் சிக்கலான சூழலை எதிர்கொள்ளும்போது கதை இன்னும் விறுவிறுப்பாக வேகமெடுக்கிறது. இந்த பின்னடைவை அவர்கள் எப்படி சமாளித்து காதலிலும், வாழ்க்கையிலும் எப்படி வெற்றி கண்டனர் என்பதை திரைப்படத்தின் எஞ்சிய பகுதி வர்ணிக்கிறது. மனதை வருடும் இந்த காதல் காவியத்தை வரும் ஞாயிறு அன்று தவறாமல் கண்டு ரசியுங்கள்.
 
2021 செப்டம்பர் 5, இந்த ஞாயிறு அன்று, உங்கள் வார இறுதி நாளை குதூகலமும், பொழுதுபோக்கும் நிறைந்ததாக ஆக்குவதற்கு பிற்பகல் 1.00 மணி மற்றும் 4.00 மணிக்கு மறவாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் சேனல் கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிப்படி எந்த நேரத்திலும் இந்த நிகழ்ச்சிகளை காண பார்வையாளர்கள் VOOT செயலியையும் டியூன் செய்யலாம்.