ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனத் துறை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது: 2021 ஜூலை மாதத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 533 வாகனங்களை விற்பனை செய்துள்ளது!

ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனத் துறை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது: 2021 ஜூலை மாதத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 533 வாகனங்களை விற்பனை செய்துள்ளது!
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனத் துறை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது: 2021 ஜூலை மாதத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 533 வாகனங்களை விற்பனை செய்துள்ளது!

ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனத் துறை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது: 2021 ஜூலை மாதத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 533 வாகனங்களை விற்பனை செய்துள்ளது!

சென்னை, ஆகஸ்ட் 03, 2021: ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2021- 2022-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்குள் மிகச்சிறப்பான, நேர்மறையான தொடக்கத்துடன் நுழைந்துள்ளது. ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களின் தேவை அதிகரித்தது தெரியவந்தது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஜூலை மாதத்தில் கூடுதலாக 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் வாகனங்களை உற்பத்தி செய்து வழங்கியது.

ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜூலை' மாத மொத்த விற்பனை 3 லட்சத்து 85 ஆயிரத்து 533 ஆக இருந்தது. முந்தைய ஜூன் மாத விற்பனையை விட இது 66 சதவீதம் அதிகமாகும். இதில் உள்நாட்டு விற்பனை 3 லட்சத்து 40 ஆயிரத்து 133 ஆகவும் ஏற்றுமதி 45 ஆயிரத்து 400 ஆகவும் இருந்தது.

தொழில்துறைச் சூழல் மற்றும் சந்தைத் தேவைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்த, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு இயக்குநர் யத்வீந்தர் சிங் குலேரியா, (Yadvinder Singh Guleria, Director – Sales & Marketing, Honda Motorcycle & Scooter India Pvt. Ltd.) "சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஹோண்டா நிறுவனம் படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து வருகிறது. ஹோண்டாவின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜூலை மாதத்தில் இதன் விற்பனை 4 லட்சம் என்ற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள எங்கள் டீலர் நெட்வொர்க்கின் பெரும்பகுதி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்கள் மீது மக்கள் தகவல்களைக் கேட்பது பெருமளவு அதிகரித்துக் காணப்படுகிறது. நல்ல பருவமழை, தனிப்பட்ட போக்குவரத்து மீதான விருப்பம் அதிகரிப்பு மற்றும் பண்டிகைக் காலங்கள் வருவது போன்ற காரணங்களால், சந்தை விரைவான மீட்சியை அடையும் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

ஜூலை 2021-ன் முக்கிய சிறப்பம்சங்கள்:

1. ஹோண்டா பிக்விங் நெட்வொர்க் விரிவாக்கம்:

பிக்விங் டாப்லைன் சென்னை (அதன் பிரீமியம் பெரிய பைக் வணிகப் பிரிவு) மற்றும் சண்டிகரில் பிக்விங் அவுட்லெட் (பிரத்தியேகமாக நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் பிரிவு) தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் ஹோண்டா தனது பயணத்துக்கான உந்துதலை (#GoRidin) மேலும் உயர்த்தியது.

2. ஹோண்டா பிக்விங் ‘சர்வீஸ் ஆன் வீல்ஸ் (SOW)’ முன்முயற்சி:

பெரிய பைக் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய வாகன உரிம அனுபவத்தை அதிகரிக்க, வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று தரமான சேவையை வழங்க ஹோண்டா ‘சர்வீஸ் ஆன் வீல்ஸ்’ முயற்சியைத் தொடங்கியுள்ளது.

3. பெரிய பைக் விநியோகம் தொடக்கம்:

பெரிய பைக் ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் ஹோண்டா தனது வாடிக்கையாளர்களுக்கு சிபி650ஆர் (CB650R) மற்றும் சிபிஆர்650ஆர் (CBR650R) விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. அத்துடன், ஹோண்டா தமது பிரத்யேக பிரீமியம் சில்லறை விற்பனை நிலையமான ஹோண்டா பிக்விங் டாப்லைன் மூலம் 2021-ம் ஆண்டின் முன்னணி மாடலான கோல்ட் விங் டூரின் விநியோகத்தையும் தொடங்கியுள்ளது.

4. வாடிக்கையாளர்களுக்கான இணையதள சேவை முன்பதிவு:

தனது வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஹோண்டா, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயணிகள் வாகனம் மற்றும் பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் ஒரு புதிய இணையதள சேவை முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு சர்வீஸுக்கான முன்பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளலாம். மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அதற்கான உறுதிப்படுத்துதல் தகவலைப் பெறலாம். அதைத் தொடர்ந்து அவர்களது வசதிக்கேற்ப வொர்க் ஷாப்பிற்குச் சென்று சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

5. ஹோண்டா இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் செயலி (ஹோண்டா 2 வீலர்ஸ் பார்ட்ஸ் அப்ளிகேஷன்):

விற்பனை நடைமுறைகள் அனைத்திலும் உதிரி பாகங்கள் பிரிவை மேலும் மேம்படுத்த டிஜிட்டல் தீர்வுகளை ஹோண்டா மேம்படுத்துகிறது. இதன் மூலம், ஹோண்டா ஒரு பிரத்தியேகமான உதிரி பாகங்கள் விநியோக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உதிரிப் பாகங்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற இந்தச் செயலி உதவும்.

6. விற்பனையில் மைல்கல்:

மாநிலங்களில் தனது செயல்பாடுகளை ஹோண்டா மேலும் வலுப்படுத்தியுள்ளது. குஜராத்தில் புகழ்பெற்ற ஆக்டிவா 6 ஜி மற்றும் ஷைன் பிரிவில் 50 லட்சம் இரு சக்கர வாகன வாடிக்கையாளர்கள் என்ற எண்ணிக்கையை எட்டி மைல் கல் சாதனையை ஹோண்டா படைத்துள்ளது.

7. சாலைப் பாதுகாப்பு:

ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் லூதியானாவில் போக்குவரத்து பயிற்சி பூங்காவின் 5-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. மினி-சிட்டி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம், இதுவரை அந்த நகரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து 1 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, public.relations@honda2wheelersindia.com என்ற இ மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.