ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக மருந்து மொத்த விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
Vovt
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு உதவிடும் வகையில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்ற மாத்திரைகளை 50 சதவீத சலுகை விலையில் வழங்கப்போவதாகக் கூறினார். அதற்காக மருந்து மொத்த விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வாட்ஸப் எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.
Byte பாலசுப்பிரமணியன், மருந்து மொத்த விற்பனையாளர் சங்கம்

ஊரடங்கு காலத்தில் வீடுகளிலேயே இருந்து நோயை எதிர்க்கும் வகையில் மக்களுக்கு இலவச மருத்துவ சேவையையும் சங்கத்தின் சார்பில் வழங்க உள்ளதாக பாலசுப்பிரமணியன் கூறினார். 9342 066 388 என்ற வாட்ஸப் எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு இலவச சேவையை பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.