மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்..!!

மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்..!!
மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்..!!

சென்னை: மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மின்கட்டண உயர்வால் தொழில்துறை கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக கூறி 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாநிலம் தழுவிய ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள், ஆட்டோ லூம்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகளை சார்ந்த சுமார் 3 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அரிசி ஆலைகளும் இதில் கைகோர்த்துள்ளனர்.

போராட்டத்தில் ஈரோட்டில் உள்ள 20,000 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதால் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்படும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், சோலார் மெட்குறை நெட்வொர்க் கட்டணத்தை கைவிட வேண்டும், குடிசை மற்றும் குறு மின் நுகர்வோருக்கு 12 கிலோ வாட் மின் இணைப்பு அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.