“சினிமா 2.0”
“சினிமா 2.0”
புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு தினந்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை காலை11:30 மணி மற்றும் ஞாயிறு மதியம்12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர். தொகுப்பாளர்கள் ஸ்ரீ மற்றும் ஜெனி, இருபதுக்கும் மேற்பட்ட சினிமா செய்திகள் ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என அன்றன்றைய சினிமா தகவல்களை சுடச்சுட அன்றைக்கே வழங்கும் சினிமா 2.0 நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.