பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை 


ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது பெண்  கும்பல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆலோசனையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டது.


மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆலோசனையில்  "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 154 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் அறியக்கூடிய குற்றம்" போன்ற ஒரு வழக்கில் போலீலிசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போலீலிஸ் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட குற்றங்களுக்கு, உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். அறியக்கூடிய குற்றங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யத் தவறும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்திய தண்டனைச் சட்டம் 1860 (ஐபிசி) இன் பிரிவு 166 ஏ (சி) பிரிவு 326 ஏ, பிரிவு 326 பி, பிரிவு 354, பிரிவு 354 பி, பிரிவு 370, பிரிவு 370 ஏ, பிரிவு 376, பிரிவு 376 ஏ, பிரிவு 376 ஏபி, பிரிவு 376 பி, பிரிவு 376 சி, பிரிவு 376 டி, பிரிவு 376 டிஏ, பிரிவு 376 டிபி, பிரிவு 376 இ அல்லது ஐபிசி பிரிவு 509, ”என்று ஆலோசனை கூறுகிறது.