10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.

அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை, புரசைவாக்கம் பகுதிகளில் பாதிப்பு அதிகம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.சென்னையில் 100ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு.சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா!

 தமிழகத்தில் 18,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா உறுதி.தமிழகத்தில் இன்று 567 பேர் குணமடைந்தனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 133ஆக உயர்வு.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு.