நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.