கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை ‘டியூன்’ செய்யுங்கள்: வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை ‘டியூன்’ செய்யுங்கள்: வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் - 23, 24-ந்தேதிகளில் உங்களை உற்சாகப்படுத்த பல்வேறு 
சிறப்பு நிகழ்ச்சிகளை உங்களுக்காக ஒளிபரப்புகிறது
- கர்னாடக சங்கீத புகழ் சாந்தி சுரேஷ், குடந்தை சரவணன் மற்றும் கடம் உமாசங்கர் நடுவர்களாக பங்கேற்கும் இசை நிகழ்ச்சியையும் பார்த்து ரசியுங்கள்
 
சென்னை, ஜன.21- பண்டிகை கால விடுமுறையை தொடர்ந்து தற்போது நாடகம், தொடர்கள் இல்லாத பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சிகளை பார்க்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
வரும் 23 மற்றும் 24-ந்தேதிகளில் கலர்ஸ் கிச்சன், பஜன் சாம்ராட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதில் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியில் விதவிதமான உணவுகளை சமையல் கலை நிபுணர்களும், பிரபலங்களும் சமைத்து அசத்த இருக்கிறார்கள். இதேபோல் பஜன் சாம்ராட் நிகழ்ச்சியில் கர்னாடக இசை பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்று நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார்கள்.  
 
மகிழ்ச்சியான இசை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி புதிதாக துவக்கிய பஜன் சாம்ராட் நிகழ்ச்சியுடன் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் துவங்குங்கள். இந்த நிகழ்ச்சியில் 24 குழுக்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்த இருக்கின்றன. முதலிடம் பிடிப்பதற்காக இவர்கள் கடுமையாக போட்டி போடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட 10 குழுக்கள் அடுத்த சுற்றுக்கு செல்கின்றன. எலிமினேஷன் சுற்றில் மீதம் உள்ள 14 குழுக்களுக்கு கடுமையாக போட்டி போட்டு இந்த நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக்க உள்ளன. இதற்கான நடுவர்களாக கர்னாடக இசை புகழ் டாக்டர் ஆர். கணேஷ் மற்றும் மகதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பல்வேறு பஜனை பாடல்களை பாடி உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தவிருக்கிறார்கள்.  
 
இசை கோலாகலம்– பஜன் சாம்ராட் நிகழச்சியை பிரியதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சிக்கான சிறப்பு நடுவர்களாக பிரபல கர்னாடக இசை புகழ் சாந்தி சுரேஷ், குடந்தை சரவணன் மற்றும் கடம் உமா சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 
மசாலா : அடுத்ததாக பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி உங்கள் நாவில் நிச்சயம் நீர் ஊறச் செய்யும் நிகழ்ச்சியாக அமையும். இதில் சமையல் கலை நிபுணர்கள் தாமு மற்றும் ஸ்ரேயா ஆகியோர் அன்னாசிபழ ப்ரைடு ரைஸ், முட்டைக்கோஸ் கீமா ரோல், கோதுமை ரவை பிஸ்கெட் மற்றும் கருவேப்பிலை சிக்கன் வருவல் உள்ளிட்ட நாவில் நீர் ஊறும் உணவுகளை சமைத்து காண்பிக்க இருக்கிறார்கள்.
 
நடிகை வீட்டு சமையல்:  மேலும் விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் ஆகிய பிரிவில் நடிகை வைஷாலி மற்றும் தாட்சியாயினி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சில்லி சிக்கன் பரோட்டா, நெய் உருளை உருண்டை, மீன் அல்வா மற்றும் கலக்கல் ஸ்மூத்தி உள்ளிட்ட விதவிதமான உணவுகளை சமைக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஸ்ரீரஞ்சனி தொகுத்து வழங்க இருக்கிறார்.
 
வரும் 23 மற்றும் 24-ந்தேதிகளில் இந்த நிகழ்ச்சிகளை உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து ரசியுங்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வார இறுதி நாட்களில் உங்களுக்கு நிச்சயம் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.