'கம கம சமையல்'

'கம கம சமையல்'

சமையல் அப்படின்னு சொன்னாலே அலறி ஓடுறாங்க. ஏன்னா, என்ன செய்யுறது எப்படி செய்யறதுன்னு சரியா தெரியாததால எல்லாருக்கும் சமையல் செய்யவே கஷ்டமா இருக்கு.

ஆனா இப்படி இருக்கிறவங்களுக்கு கூட சமையலை, நமக்கு பிடிச்ச உணவை எப்படி ரொம்ப ஈஸியா வித்தியாசமா ருசியா சமைக்கலாம் சொல்ற நிகழ்ச்சி தான் வேந்தர் தொலைக்காட்சியின் 'கம கம சமையல்'.

இந்த நிகழ்ச்சில சமையல் வல்லுநர் திருமதி வித்யா அவர்கள் நம்ம தமிழ்நாடு உணவுல இருந்து உலக நாடுகளோட பிரபலமான சமையலை, எப்படி நம்ம வீட்டுல இருக்கிற பொருட்களை வச்சு செய்யறதுன்னு ரொம்ப அழகா செய்து காட்டுகிறார் .

சமையலில் நாம் உண்ணும் உணவுகளையே எப்படி விதம்விதமாக மாற்றி சமைப்பது என்கிற கலையையும் கற்றுத்தர இருக்கிறார். குறிப்பாக சொல்லப்போனால் உள்ளூர் வத்தக்குழம்பு முதல் வெளிநாட்டு உணவு வகை முதற்கொண்டு இந்த நிகழ்ச்சியில் இவர் செய்து காட்ட இருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியோட  மற்றொரு சிறப்பு வாரவாரம் ஒவ்வொரு (theme) தலைப்பை முன்எடுத்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பு செய்யப்படுகிறது .