“தயங்காம கேளுங்க பாஸ்”
வேந்தர் தொலைக்காட்சியில் “தயங்காம கேளுங்க பாஸ்“ எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இல்லற வாழ்வில் விட்டுக்கொடுக்காமை, காதல் உறவில் விரிசல், ஆழமான உணர்வுகளை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்பதில் குழப்பம்.
ஒரு முறை அடுத்தவரிடம் மன அழுத்தத்தை இறக்கி வைத்துவிட்டால் பாரம் குறைந்துவிடும் மனம் இளவாகிவிடும். துக்கம் கூட சுகமாகும்.
யாரிடம் சொல்வது அதற்கான பதில் வேந்தர் தொலைக்காட்சியின் “தயங்காம கேளுங்க பாஸ்“. உற்ற நண்பராய் உளவியல் ஆலோசகராய் காதோடு பேச வருகிறார் மன நல ஆலோசகர் டாக்டர் கார்த்திக் குணசேகரன். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கரோலினா .