கலைஞர் தொலைக்காட்சியில் விக்ரம் நடிக்கும் “கோப்ரா”
கலைஞர் தொலைக்காட்சியில் விக்ரம் நடிக்கும் “கோப்ரா”
கலைஞர் தொலைக்காட்சியில் 2023 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் “கோப்ரா “சூப்பர்ஹிட் திரைப்படமும் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி வருகிற ஜனவரி 1 ஆம் தேதி காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சிந்திக்க வைக்கும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு ஆர்யா, பசுபதி நடிப்பில் சார்பட்ட பரம்பரை திரைப்படமும், பிற்பகல் 1:30 மணிக்கு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கோப்ரா அதிரடி ஆக்க்ஷன் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் விக்ரம், இரட்டை வேடங்களில், பல்வேறு தோற்றங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.