கோயம்பேட்டில் மொத்த காய்கறி கடைகள் திறப்பு - பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு வணிக வளாகம், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.முதலில் உணவு தானிய கடைகளும், பின்னர் மொத்த காய்கறி கடைகளும் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. 
இந்நிலையில் நேற்று முதல் சிறு மொத்த காய்கறி கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக A முதல் G வரிசை வரை உள்ள 800 கடைகளை திறக்க பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்துள்ளது. 

சிறு மொத்த காய்கறி கடைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பொதுமக்கள் காய்கறி வாங்க வரவேண்டாம் என அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். கோயம்பேடு வணிக வளாகம் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததால், பராமரிப்பு கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.