தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு

 தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை.

 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,035 ஆக உள்ளது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.