நிகழ் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.

நிகழ் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.

நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது.

கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்தார்.
 
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்: 

தமிழக மக்கள் எந்த ஒரு மதம், சமயத்தை பின்பற்றினாலும், அவர்களை தமிழக அரசு பாதுகாக்கும்.

கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு பாலின விகிதம் 1000க்கு 917 என்பதில் இருந்து 943 ஆக உயர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தத் தேவையான அனுமதியை கேரளமும், மத்திய அரசும் தமிழகத்துக்குத் தர வேண்டும்.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் 43.9% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விட அதிகம்.

2019 - 20ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

2011 - 12 முதல் இதுவரை 3,80,000 பசுமை வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புயர்வு பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டாலும், இட ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படாது.

திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2020ம் ஆண்டு மத்தியில் நிறைவடையும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.50,80 கோடி மதிப்பில் விரைவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்த முதல்வருக்கு பாராட்டுகள்.

காவிரி  - குண்டாறு நதிகள் இணைக்கும் பணியை தமிழக அரசு செயல்படுத்தும். 

பெண்கள் பாதுகாப்புக்கான காவலன் செயலி நடைமுறை பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.