உலகின் மிகப் பிரபலமான இளம்பெண் மலாலா: ஐநா கவுரவிப்பு

பெண் கல்விக்காகப் போராடி வரும் மலாலாவை, உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் என்று ஐநா சபை கவுரவித்துள்ளது.
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில் தற்போது ஐநா சபை, கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா சபை கூறும்போது, மலாலாவின் போராட்டமும் பிறருக்கு உதவும் குணவும் அவரின் மீதான கொலை முயற்சிக்குப் பிறகு அதிகரித்தது. 2017-ல் அவர் ஐநாவின் அமைதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்று அறியப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.