சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் ஏ.பி. சாஹி

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் ஏ.பி. சாஹி

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வா் பிரதாப் சாஹி இன்று பதவியேற்றுக் கொண்டார்.அவருக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இன்று காலையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹிலராமாணீ, மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டாா். அதை ஏற்காத அவா், தனது பதவயை ராஜிநாமா செய்தாா்.அதனைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பாட்னா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வா் பிரதாப் சாஹி, சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்ற விழாவில் அமரேஷ்வா் பிரதாப் சாஹிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.