சென்னையில் டெங்கு காய்ச்சலால் ஒரு சிறுமி பலி

சென்னையில் டெங்கு காய்ச்சலால் ஒரு சிறுமி பலி
sd

மாங்காடு பகுதியை சேர்ந்த பிரித்திகா (12) என்ற சிறுமி தீவிர காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டாள். மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. அதில் சிறுமியின் உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவது கண்டறியப்பட்டது. சிறுமிக்கு டெங்கு பாதிப்பும் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுமிக்கு அதிகமான காய்ச்சல் இருந்ததும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாலும் தான் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் காரணமல்ல. ஆனாலும், பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு தான் உயிர் இழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனர்.