பாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி அடைந்து தெருக்களில் தஞ்சம்

பாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி அடைந்து தெருக்களில் தஞ்சம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதி அருகே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், இன்று மீண்டும் அங்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் பீதி அடைந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவில் 4.4 ஆக நில அதிர்வு பதிவானதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.