முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு அளிக்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படும்

முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு அளிக்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படும்

சென்னை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளையை நாளை முதல் நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 5ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளன. அதில் எரிபொருள் பெற்றதற்காக நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி செலுத்த வேண்டும். இல்லையெனில் 11ம் தேதியுடன் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு அளிக்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.