ராஜீவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து தவறானது - பொன்.ராதாகிருஷ்ணன்

ராஜீவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து தவறானது - பொன்.ராதாகிருஷ்ணன்

ராஜீவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து தவறானது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ அதே வெறுப்புணர்வை மீண்டும் உருவாக்கக் கூடிய வகையில் யாரும் கருத்துக் கூற கூடாது. ராஜீவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து தவறானது என்று தெரிவித்துள்ளார்.