நேற்று மதியம் காபூல் விமான நிலையத்தில் பெற்றொர் ஒருவர் தனது கைக்குழந்தையை எப்படியேனும் காப்பாற்றுவதற்காக வேலி மீது தூக்கி வீசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நேற்று மதியம் காபூல் விமான நிலையத்தில் பெற்றொர் ஒருவர் தனது கைக்குழந்தையை எப்படியேனும் காப்பாற்றுவதற்காக வேலி மீது தூக்கி வீசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காபூல் விமான நிலையத்தின் சுவர் அருகே கூட்டமாக கூடி நிற்கும் காபூல் மக்கள் தங்களது குழந்தைகளை தலிபான்களிடமிருந்து எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்கிற பதட்டத்தில் கம்பி வேலிகளைத் தாண்டித் தூக்கி வீசுகின்றனர். வேலிகளின் மீது நின்றுகொண்டிருக்கும் சர்வதேச ராணுவத்தினர் அந்தக் குழந்தைகளைப் பிடித்து சுவரின் மற்றொரு பக்கம் நின்றுகொண்டிருக்கும் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

 

தலிபான்களிடமிருந்து எப்படியேனும் தப்பிக்க வேண்டும் என்கிற கதறல் அந்த வீடியோவில் எதிரொலிக்கிறது. அப்படி தூக்கிக் கொடுக்கப்பட்ட சில குழந்தைகள் அந்தக் கம்பிகளில் மாட்டிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.