முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டி

முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டி

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தொடரவேண்டுமே தவிர தளர்வுகள் அளிக்கக்கூடாது.மாவட்ட வாரியாக தளர்வுகளை அறிவிக்கலாம்; மொத்தமாக அறிவிக்க முடியாது.சோதனைகள் அதிகரிக்கப்படும்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும் .அதற்காக பயப்பட தேவையில்லை. இதன்மூலம்தான் நோயை கட்டுப்படுத்த முடியும்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதிக கவனம் தேவை .சென்னையில் தற்போது பேருந்து, ரயில் சேவையை தொடங்குவது, கோயில் போன்றவற்றை திறந்தால் பாதிப்பு அதிகரிக்கும்.

 முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்; வயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் சமூக பரவல் என்பது கிடையாது.சமூக பரவல் இருந்திருந்தால் இறப்பு அதிகரித்து இருக்கும்.

வயதானவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்களை கவனமாக இருக்க வேண்டும்.பேருந்து, ரயில், மெட்ரோ போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது - மருத்துவக்குழு.சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது.கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்