மறைந்த தனது தாயார் உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர் அஞ்சலி

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து சொந்த கிராமம் வந்தடைந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன்,  தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பணன், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்காக சிலுவம்பாளையம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

இறுதிச் சடங்குகள் சிலுவம்பாளையம் இடுகாட்டில் நடைபெறுகிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர். தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் அஞ்சலி செலுத்தினார்.