உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஆன் மரியா மற்றும் ராஜாவுக்கு செக் ஆகிய இரண்டு சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
            உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஆன் மரியா மற்றும் ராஜாவுக்கு செக் ஆகிய இரண்டு சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
இந்த இரு திரைப்படங்களை பார்க்க ஞாயிற்றுக்கிழமை 8 ஆகஸ்ட், 2021 அன்று மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்
சென்னை, ஆக.7, 2021: தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான சண்டே சினி காம்போவில் இந்தவார இறுதியில் வெற்றிப்படங்களான ஆன்மரியா மற்றும் ராஜவுக்கு செக் ஆகிய இரண்டு படங்கள் ஒளிபரப்ப உள்ளது. ஸபஸல் பார்ட்னர்(Special Partner) தஞ்சாவூர், பெரியார் மணியம்மை இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வழங்கும் ஆன்மரியாவை ஞாயிற்றுக்கிழமை 8 ஆகஸ்ட், 2021 அன்று மதியம் 1 மணிக்கும், ராஜவுக்கு செக் மாலை 4 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.
மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஆன்மரியா படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. இந்த படத்தை மிதுன் மானுவல் தாமஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாரா அர்ஜூன், சன்னி வெய்ன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை 10 வயது ஆன்மரியா (சாரா அர்ஜுன்) மற்றும் அவரது பி.டி. மாஸ்டருக்கு பாடம் கற்பிக்க பணியமர்த்தப்பட்ட கிரிஷ், (சன்னி வெய்ன்) இடையிலான நட்பு பற்றியதாகும். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படத்தின் மீதி கதையாகும். துல்கர் சல்மான் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் த்ரிலிங் திரைப்படமான ராஜாவுக்கு செக் படத்தை சாய் ராஜகுமார் இயக்கி உள்ளார். தங்களை சிறையில் அடைத்ததற்காக போலீஸ்காரரின் மகளை கடத்தி அவரை பழிவாங்கும் 4 குற்றவாளிகளைப் பற்றிய கதையாகும். அவர் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதையாகும். இந்தப் படத்தில் சேரன், இர்பான் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே, சரயு மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், நந்தனா வர்மா துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், இந்த ஞாயிற்றுக்கிழமை, 8-ந்தேதி மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த 2 திரைப்படங்களையும் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும். வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.
வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.
                        



        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        