85 இலட்சத்திற்கும் மேல் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் டிஜிட்டல் பேமண்டுகளை அமேஸான் பே வழியாக ஏற்கின்றன

85 இலட்சத்திற்கும் மேல் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் டிஜிட்டல் பேமண்டுகளை அமேஸான் பே வழியாக ஏற்கின்றன
85 இலட்சத்திற்கும் மேல் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் டிஜிட்டல் பேமண்டுகளை அமேஸான் பே வழியாக ஏற்கின்றன

85 இலட்சத்திற்கும் மேல் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் டிஜிட்டல் பேமண்டுகளை அமேஸான் பே வழியாக ஏற்கின்றன

சென்னை: சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை (எஸ்எம்பிகள்) டிஜிட்டலாக செயல்படுத் துவதற்கான ஒரு அமேஸான் பே-வின் முயற்சியின் ஒரு பகுதியாக, தனது டிஜிட்டல் பேமண்டுகள் உள்கட்டமைப்புடன் 85 இலட்சத்திற்கு மேல் ஆஃப்லைன் சிறு வணிகங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவர்களுக்கும் மேல் அதிகாரம் வழங்கியுள்ளதாக அமேஸான் பே அறிவித்தது.

முன்னதாக, இந்த வணிகர்கள் பெரியளவில் தங்கள் வணிக செயல்பாடுகளுக்காக ரொக்கத்தில் பரிவர்த்தனை செய்து வந்தனர், இப்போது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அமேஸான் பே-வின் QR குறியீட்டைப் பயன்படுத்தி பேமண்டுகளை ஏற்கிறார்கள். மேலும், வணிக செயலிக்கான அமேஸான் பே, குரல் அறிவிப்புகள் அம்சம், பணி மூலதன கடன்களின் எளிதானக் கிடைக்குந்தன்மை போன்ற முயற்சிகள், அத்தகைய நுண்வணிகங்களையும் வணிகர்களையும் ஒரு செளகரியமான டிஜிட்டல் பயணத்தை அனுபவிப்பதை செயல்படுத்தியள்ளது.

மகேந்தர நெரூர்கர், சிஇஒ & விபி, அமேஸான் பே சொன்னதாவது “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு SMB கள் முதுகெலும்பாக உள்ளன. ஆஃப்லைன் வணிகர்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்களின் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது மற்றும் அவர்களின் டிஜிட்டல் பயணத்தை விரைவுபடுத்தும் பல தொடு புள்ளிகளுக்கு இடையே அவர்களின் பேமண்டு அனுபவத்தை மேம்படுத்துவது எங்கள் நோக்கம். இந்த மைல்கல் இந்தியாவின் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட SMB கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் சாட்சியமாகும், மேலும் நாங்கள் உண்மையிலேயே தாழ்மையுடன் இருக்கிறோம். முழுமையான முன்முயற்சிகளை கொண்டு வருவதற்கும், இந்தியா செலுத்தும் முறையை மாற்றுவதற்கும் மற்றும் SMB களுக்கான பேமண்டு ஏற்றுக்கொள்ளும் சூழலை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் எங்கள் முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

இந்தியா மற்றும் பாரத் இடையேயான டிஜிட்டல் பிளவைக் குறைக்கும் பயணத்தில், அமேசான் பே சிறு வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் பல்வேறு குழுமத்தை செயல்படுத்தியுள்ளது. 85 லட்சத்திற்கும் மேற்பட்ட SMBக்களில், 40 லட்சத்திற்கும் அதிகமான சில்லறை மற்றும் ஷாப்பிங் அவுட்லெட்டுகளான கிரானா ஸ்டோர்கள், ஜெனரல் ஸ்டோர்கள்; உணவகங்கள், சிறிய உணவகங்கள், துரித உணவு இணைப்புகள் போன்ற 13 லட்சத்திற்கும் அதிகமான உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள்; சலூன்கள், மொபைல் ரீசார்ஜ், இன்டர்நெட் கஃபே, சுகாதாரம் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு, பயணம் மற்றும் போக்குவரத்து, கல்விச் சேவைகள், இதர வகைகளைக் கொண்ட கடை உரிமையாளர்கள் மற்றும் பல போன்ற சுமார் 30 லட்சம் சேவை வழங்குநர்கள் உள்ளனர்.

அமேஸான் பே-வை பயன்படுத்துவதன் பலன்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்ட, ஆந்திர பிரதேசம், சாய் அப்போலோ மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர், சாய், சொன்னார்: “அமேஸான் பே-வை பயன்படுத்தும் போது சேவை விரைவாக ஆகிறது மற்றும் மிக சிறியளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இந்த தளம் பரிவர்த்தனைகளை கையாள்வதை மிகவும் எளிதாக ஆக்குகிறது. எனது போட்டியாளர்கள் டிஜிட்டல் பேமண்ட் சலுகையை வழங்காததால், வாடிக்கையாளர்கள் என்னிடம் இருந்து வாங்குவதற்கு, விரும்புகிறார்கள், அது எனது வியாபாரத்திற்கு பெருமளவு பயனுள்ளதாக இருக்கிறது”

“அமேஸான் பே, போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன், சராசரி ரீடெயில் ஸ்டோர் உரிமையாளர் வாடிக்கையாளர் கணக்குகளை சரிபார்ப்பது எளிதாக இருக்கிறது. முன்னதாக, ரொக்கம் அதிகமாக புழக்கத்தில் இருந்த போது, எங்கள் வணங்கிக் கணக்குகளில் நாளின் நிதிகளை பிரதிபலிக்க செய்யவது ஒரு சவாலான ஒன்றாக அடிக்கடி நாங்கள் அறிந்தோம் - நுண் பரிவர்த்தனைகளுடன் கூடிய சில்லறைகள் கையில் உள்ள தொகையை குழம்பச் செய்யும்” என்றார் மேற்கு வங்கத்தின் பர்சாத்தில் ஃபுட் ஜாயின்ட் நடத்தும் பவன்.

”இப்போது, நாங்கள் அமேஸான் பே உதவியுடன் ஒரு நாளைக்கு 25-30 பரிவர்த்தனைகளை செய்கிறோம். அருகாமையில் உள்ள ஒவ்வொரு ஸ்டோர் உரிமையாளரும் டிஜிட்டல் பேமண்டுகளில் பரிவரத்தனை செய்கிறார். நாங்கள் முன்பு சந்தித்த யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கான எளிதான அணுகல் பிரச்சினையைத் தீர்த்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.