ஒரே இந்தியா ஒரே நாடு என்ற குறிக்கோளுடன் நாட்டை நேசியுங்கள் அன்பு காட்டுங்கள் என்.வெங்கட்ராமன்
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்பகல்வி நிறுவனத்தின் மேலாண்மை பள்ளி சார்பில் நடத்தப்பட்ட டாக்டர் பாரிவேந்தர் மேலாண்மை சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்திய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.வெங்கட்ராமனுக்கு வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்பி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். உடன் இணை துணை வேந்தர் முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் மேலாண்மை பள்ளி இயக்குனர் முனைவர் பி.ராகவன் டீன் முனைவர் வி.எம்.பொன்னைய்யா ஆகியோர் உள்ளனர்.
ஒரே இந்தியா ஒரேநாடு என்ற குறிக்கோளுடன் நாட்டை நேசியுங்கள் அன்பு காட்டுங்கள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.வெங்கட்ராமன் பேச்சு
நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இளைஞர்களாகிய நீங்கள் ஒரேஇந்தியா ஒரேநாடு என்ற குறிக்கோளுடன் நாட்டை நேசியுங்கள் அன்புகாட்டுங்கள் என்று உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் என்.வெங்கட்ராமன் இளைஞர்களை கேட்டுக் கொண்டார்.
காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மேலாண்மை பள்ளி சார்பில் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மேலாண்மை சொற்பொழிவு 3வது நிகழ்வு இன்று நிறுவனத்தில் அமைந்துள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது. நீக்கப்பட்ட370 வது ஷரத்து என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மேலாண்மை பள்ளி டீன் முனைவர் வி.எம்பொன்னைய்யா வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் நிறுவன வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்பி தலைமை வகித்து பேசியதாவது
ஒரேநாடு ஒரேஇந்தியா என்ற வகையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது ஷரத்து நீக்கப்பட்டது பற்றி மத்திய அரசு அதற்கான தகவல்களை அளித்து வருகிறது.1947ம் இந்தியநாடு விடுதலை பெற்ற போது நம் நாட்டிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவானது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெருபாண்மையினர் வரவேற்றனர் அந்தநாட்டில் குடியமர்த்தப்பட்டனர்.
இந்திய மாநிலங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை ஆகிரமித்தது தொடர்ந்து அங்கு ஒரு சிலரின் எதிர்ப்பு காரணமாக அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவந்தது. இதை கருத்தில் கொண்ட பாரதிய ஜனதா கட்சி காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 370வது ஷரத்து என்ற சிறப்பு அந்தஸ்தை திரும்பபெற்று அதனை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கிகாரம் வழங்கபட்டது.
370வது ஷரத்து நீக்கபட்டதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எந்த சூழ்நிலையில் இந்த சிறப்பு ஷரத்து திரும்ப பெற்றது என்பது பற்றி மத்திய அரசு உரிய தகவல்களை தெரிவித்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீக்கப்பட்ட 370வது ஷரத்து மற்றும் அதன்விளைவுகள் என்ற தலைப்பில் டாக்டர் பாரிவேந்தர் மேலாண்மை சொற்பொழிவு நிகழ்த்தியதாவது
காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370வது ஷரத்து திரும்ப பெறப்பட்டது பற்றி ஏற்கனவே வெவ்வேறு இரண்டு இடங்களில் பேசியுள்ளேன். அந்த இடங்களில் வேறு மொழியினரிடையே பேசினேன். அது பற்றிய விவரங்களை 3வது இடமாக தமிழ் மக்கள் உள்ள இந்த இடத்தில் பேசுவது பெருமையாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த போது அப்போது ஆட்சி செய்து வந்த 561 சமஸ்தானங்கள் இந்திய அரசுடன் இணைந்தன. ஜம்முகாஷ்மீர், ஜொனாகத், ஹைதராபாத் சமஸ்தானங்கள் இணையவில்லை.
ஜம்முகாஷ்மீர் மாநிலம்இணைய நிபந்தனை விதிக்க அதனை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து வழங்க 370 ஷரத்தின் மூலம் சிறப்புஅந்தஸ்துவழங்கப்பட்டது.
அதன்பிறகு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் நிலவியதுடன் நிதிஒதுக்கீடு மாறுபட்டது. காஷ்மீர் மாநிலத்திற்கு 90 சதவிகிதம் நிதியாகவும் 10 சதவிகிதம் கடனாகவும் வழங்கப்பட்டது. இந்தியநாடு பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு வகையான மாநிலங்களை கொண்டது.
அந்தந்த மாநிலமக்கள் அவர்களின் உரிமைகள் கோருவது நடைமுறை இதை மனதில் கொள்ளவேண்டும். ஆனால் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அம்மாநிலத்தில் பல்வேறு வகையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது.
இதனால் ஒருநாடு இரண்டு அரசு என்ற நிலை உருவானது. எனவே இதனை மாற்றி ஒருநாடு ஒருஅரசு என்ற வகையில் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5ந் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கான 370வது சிறப்பு அந்தஸ்தினை வாபஸ்பெற்று அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அதனை மற்ற மாநிலங்களை போல மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இளைஞர்கள் எதிர்கால நாட்டினை நிர்ணயிக்க கூடியவர்கள் ஒரேஇந்தியா ஒரேநாடு என்ற குறிக்கோளுடன் நாட்டை நேசியுங்கள் அன்பு செலுத்துங்கள் என்று கூறினார்.
இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை துணைவேந்தர் முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் மேலாண்மை பள்ளி இயக்குனர் முனைவர் பி.ராகவன் இதழியல் பள்ளி டெபுடிடீன் பேராசிரியர் ஶ்ரீதர் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.