விஹெச்எஸ் மருத்துவமனையின் சாதனை 15 வயதான இளம் பெண்ணின் முதுகுத்தண்டு பக்கவளைவு பிரச்சனைக்கு வெற்றிகரமான அறுவைசிகிச்சை

விஹெச்எஸ் மருத்துவமனையின் சாதனை 15 வயதான இளம் பெண்ணின் முதுகுத்தண்டு பக்கவளைவு பிரச்சனைக்கு வெற்றிகரமான அறுவைசிகிச்சை
விஹெச்எஸ் மருத்துவமனையின் சாதனை 15 வயதான இளம் பெண்ணின் முதுகுத்தண்டு பக்கவளைவு பிரச்சனைக்கு வெற்றிகரமான அறுவைசிகிச்சை

விஹெச்எஸ் மருத்துவமனையின் சாதனை
15 வயதான இளம் பெண்ணின் முதுகுத்தண்டு பக்கவளைவு பிரச்சனைக்கு வெற்றிகரமான அறுவைசிகிச்சை

•    ஆரம்ப நிலையிலேயே முதுகுத்தண்டின் பக்க வளைவு (ஸ்கோலியோசிஸ்) பிரச்சனைக்கு சிகிச்சையளிக்காவிடில், நுரையீரல் நோய்களுக்கு இது வழிவகுக்கும் மற்றும் வாழ்நாள் காலஅளவை குறைக்கும் 
•    0-18 ஆண்டுகள் வயதுப் பிரிவில் 1% குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பக்கவளைவு பிரச்சனை இருக்கிறது; 2018 ஆம்ஆண்டின் சர்வேயின்படி இந்தியாவில் 5 மில்லியன் சிறார்கள் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
•    இந்தியாவில் இப்பாதிப்புள்ள 60% நபர்கள் அதற்கு சிகிச்சையளிக்காமலேயே விட்டுவிடுகின்றனர். 
சென்னை, 1 செப்டம்பர் 2021:முதுகுத்தண்டில் வளைவு (ஸ்கோலியோசிஸ்) என்பது குழந்தைகளிடம் எந்தவொரு வயதிலும் அவர்களது முதுகுத்தண்டில் உருவாகக்கூடிய ஒரு வளைவாகும்.ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், நுரையீரல் நோய், வாழ்க்கையின் மோசமான தரம், நடப்பதில் சிரமம் மற்றும் உடல் செயல்பாடுகளின்போது கடுமையான முதுகுவலி போன்ற சிக்கல்களுக்கு இப்பாதிப்பு நிலை வழிவகுக்கக்கூடும்.இந்தியாவில் முதுகுத்தண்டில் காணப்படும் இந்த உருக்குலைவின் காரணமாக 5 மில்லியன் குழந்தைகள் சிரமப்படுகின்றனர் மற்றும் இவர்களுள் 60%-க்கும் அதிகமானவர்கள், இதற்கு சிகிச்சைப் பெறாமலேயே விட்டுவிடுகின்றனர்.இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமையும் மற்றும் இக்குழந்தைகளின் குடும்பத்தில் வறிய சமூக பொருளாதார நிலையுமே இதற்கு காரணமாக இருக்கின்றன.
இப்பாதிப்பு நிலை குறித்த சூழல் இப்படி இருக்கையில், சென்னையைச் சேர்ந்த வாலண்ட்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனை (VHS), கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோலியோசிஸ் நோயால் அவதியுற்று வந்த 15 வயது ஆன, இளம் பெண்ணிற்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இளவயது சிறுமிக்கு முதுகு கூனல் உருவானது மற்றும் அதைத்தொடர்ந்து படிப்படியாக இந்த நிலை எந்த அளவிற்கு மோசமானது என்றால், அச்சிறுமியால் நேராக படுக்கவோ, தடங்கலின்றி நடக்கவோ இயலவில்லை.அத்துடன், சுவாசிப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன.பல்வேறு மருத்துவர்களை கலந்தாலோசித்தபோதும், கீழ்ப்புற உடல் உறுப்புகளில் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அறுவைசிகிச்சை இந்த சிறுமிக்கு வழங்கப்படவில்லை.அதன்பிறகு இந்நோயாளி, எங்களது மருத்துவமனையை தேடி வந்தார்.பரிசோதனைகளுக்குப் பிறகு, அறுவைசிகிச்சையை செய்வது என்று நாங்கள் முடிவு செய்தோம்; தங்களது மகளால் திரும்பவும் நடக்க இயலுமா என்ற அதிக கவலை கொண்டிருந்த அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு நம்பிக்கையுணர்வை நாங்கள் வழங்கினோம்,” என்று விஹெச்எஸ் மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவரும் மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். விக்னேஷ் புஷ்பராஜ் கூறினார். 

ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகுத்தண்டு வளைவு பாதிப்பு இந்நோயாளிக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் வளைவை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து நடந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்களுக்குள்ளேயே இந்நோயாளியால் இயல்பாக நடக்க முடிந்தது.“வழக்கமாக, இளவயது நோயாளிகளுக்கு பிணைச்சட்டம் (பிரேசிங்) என்ற வழிமுறை, வளைவு இன்னும் பெரிதாகாமல் இருப்பதை தாமதிப்பதற்காக அல்லது முதுகுத்தண்டின் வளைவை குறைப்பதற்காக பரிந்துரைக்கப்படுகிறது.முதுகுத்தண்டு வளைவு நிலையை சரிசெய்ய பிணைச்சட்டங்களை அணியுமாறு பல நேரங்களில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதுண்டு.ஆனால், இந்த நோயாளிக்கு, அவரது வளைவின் கடும் தீவிரத்தன்மை காரணமாக, பிணைச்சட்டம் அணிவது ஒரு விருப்பத்தேர்வாக இருக்கவில்லை.இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறையில் செயல்பாட்டிற்கு வந்திருக்கும் மிக நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக, ஸ்கோலியோசிஸ் போன்ற பாதிப்பு நிலைகளுக்கு அந்தந்த நேர்வின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் மிகக்குறைவான சிக்கல்களோடு அல்லது சிக்கல்களே இல்லாமல் திறம்பட சிகிச்சையளிக்க இயலும்,” என்று டாக்டர். விக்னேஷ் மேலும் விளக்கமளித்தார். 
3 ஆண்டுகள் என்ற மிக சிறிய வயதிலேயே முதுகுத்தண்டு பாதிப்பு நிலை இருக்கிறதா என அடையாளம் காணமுடியும்.ஏற்றஇறக்கமுள்ள தோள்பட்டைகள் (இரு தோள்பட்டைகளின் உயரத்தில் வித்தியாசம்) ஒரு பக்கமாக உடல் சாய்ந்திருக்கும் நிலை, ஒருபக்கத்தில் இடுப்பிற்கும், கைக்குமிடையே பெரிய இடைவெளி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் முன்புறமாக சாயும்போது முதுகுப்பக்கத்தில் கூன் ஆகிய நிலைகளின் மூலம் இப்பாதிப்பு இருக்கிறதா என அறியமுடியும்
“மிக ஆரம்ப நிலையிலேயே இப்பாதிப்பு நிலை கண்டறியப்படுமானால், அறுவைசிகிச்சையின் துல்லியமும், வெற்றியும் மிக அதிகமாக இருக்கும். மேலும், குழந்தை வளர்ச்சியடையவும் மற்றும் பிற குழந்தைகள் போல இயல்பான வாழ்க்கையை நடத்தவும் அறுவைசிகிச்சை உதவுகிறது.சிறுவர்களோடு ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையில் இளவயது சிறுமிகளே இந்நிலையால் பாதிக்கப்படுகின்றனர். நம்நாட்டின் பல பகுதிகளில், ஸ்கோலியோசிஸ் கூன் முதுகு என்பது, ஏழை மனிதனின் நோய் என்று கருதப்படுகிறது.இதற்கான சிகிச்சைகளுக்கு அதிக பணம் செலவாகும் என்ற காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர், முதுகுத்தண்டு சிறப்பு மருத்துவர்களை சிகிச்சைக்காக அணுகுவதில்லை.எனினும், விஹெச்எஸ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைகளையும் மற்றும் சிகிச்சைகளையும், ஏழ்மையான பொருளாதார பின்னணியைச் சேர்ந்த நபர்களுக்காக நாங்கள் வழங்கி வருகிறோம்.மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து இத்தகைய குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சைக்கான நிதி ஆதரவு வழங்கப்படுகிறது. அத்துடன், தாராள மனதுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து சிகிச்சை செலவிற்கான நிதி உதவியும் கிடைக்கப்பெறுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
முதுகுத்தண்டு வளைவு பிரச்சனையுள்ள ஒரு குழந்தை மற்றவர்களைப்போல இயல்பான வாழ்க்கை நடத்துவதற்கு உதவ விஹெச்எஸ் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கலாம்.இதற்காக தொடர்புகொள்ள வேண்டிய பிரிவு: விஹெச்எஸ் டொனேஷன்ஸ் -98847 30000