மூன்றரை வயது மகனுக்கு ஹெல்மெட் மாட்டிய தந்தை!ஆச்சிரியத்தில் சென்னை காவல் ஆணையம்

 மூன்றரை வயது மகனுக்கு ஹெல்மெட் மாட்டிய தந்தை!ஆச்சிரியத்தில் சென்னை காவல் ஆணையம்

மூன்றரை வயது மகனுக்கு ஹெல்மெட் மாட்டி அழைத்து சென்ற தந்தையை சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டியுள்ளார். 
 
சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது அவசியமானது என கூறப்பட்டு வந்தது. ஆனால், பெரும்பாலான மக்கள் அதை பின்பற்றாத நிலையில் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சென்னையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஜனார்த்தனன் என்பவர் தனது மூன்றரை வயது மகனுக்கு ஹெல்மெட் மாட்டி அழைத்து சென்றது வைரலாகி வருகிறது. இதனை பலரும் பாராட்டிய நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதனும் பாராட்டியுள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம் என்ற நடைமுறைக்கு ஜனார்த்தனன் முன்னுதாரணமாக திகழ்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 

ஆனால், சமூக வலைத்தளங்களில் இதற்கு பாராட்டு குவிந்தாலும், நீங்க போட்ற ஃபைனுக்கு பயந்தே ஹெல்மெட் போட்டு போகனும் போல இருக்கு என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.