சில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.!
கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,658 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,232 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.
அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,815 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,520 விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 48.30 காசுகளாகவும், வெள்ளி ரூ.48,300 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தில் சரிவை சந்தித்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.