ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு ஆண்டுகளுக்கு தடை!

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு ஆண்டுகளுக்கு தடை!
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு ஆண்டுகளுக்கு தடை!

ரஷ்யா வீரர்கள் ஊக்க மருந்து சர்ச்சையால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் பங்கேற்க ஊக்க மருந்து மருந்து தடுப்பு அமைப்பான WADA தடைவிதித்தது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் 2020, கத்தார் FIFA 2020 உலக கோப்பை கால்பந்து, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் ரஷ்யா வீரர்கள் பங்கேற்க முடியாது என தடை விதித்தது.

2014 ஆம் ஆண்டு ரஸ்சியாவில் நடந்த சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது தெரியவந்துள்ளது. அந்நாட்டு அரசே வீரர்களுக்கு ஊக்க மருந்து பயன்படுத்த ஆதரவாக இருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2015 NOV 15 தேதி தடை விதிக்கப்பட்டது. இதனால் 2016 நடந்த ரியோ ஒலிம்பிக்ஸில் ரஷ்யா தடகள வீரர்கள் பங்கேற்க முடியவில்லை. மேலும் மற்ற வீரர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

WADA சார்பில் மூன்று பேர் கொண்ட குழு விசாரணை செய்தபின் 323 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரஷ்யா ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் நம்பகத்தன்மை இல்லை மேலும் நடத்தப்பட்ட சோதனைகளின் மாதிரியை அழித்துவிட்டதாக கூறியது. இதனால் ரஷ்யாவுக்கு ஒலிம்பிக் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் பெங்கேற்க தடை விதிக்க வலியுறுத்தியது. WADA வின் பரிந்துரையை ஏற்று ரஷ்யாவிற்கு 4 ஆண்டு தடைவிதிக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் ரஷ்யா இந்த தடைக்கு 21 நாட்களுக்குள், மேல் முறையீடு செய்யலாம். அதே சமயம் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்காத நட்சத்திரங்கள் ஒலிம்பிக்ஸில் விளையாட அனுமதிக்க படுவர் என செய்தி வெளியாகியுள்ளது.