பிரதமர் மோடி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதியுள்ள ஆவண புத்தகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று வெளியிடப் பட்டது . இந்நிகழ்ச்சியிலே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், 'ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது; நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்; இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்'  அப்பட்டீன்னு சொல்லி தன் பிராண்ட் சிரிப்பை உதிர்த்தார்.