ரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம் பெற முடியும்: விராட் கோலி பேட்டி

ரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம் பெற முடியும்: விராட் கோலி பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியில் ரோஹித், தவன், ராகுல் ஆகிய மூவரும் இடம்பெற முடியும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஃபார்மில் உள்ள வீரர் அணிக்குத் தேவையானவர். சிறந்த வீரர்களே அணிக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்களிலிருந்து சூழலுக்கேற்றவாறு அணியைத் தேர்வு செய்யவேண்டும். ரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. மூவரும் விளையாடினால் நான் 4-ம் நிலை வீரராகவும் விளையாடத் தயார். நான் எங்கு விளையாடுகிறேன் என்பது குறித்து பிடிவாதம் பிடிப்பதில்லை. எந்த நிலையில் விளையாவேன் என்பது குறித்து எனக்கு அச்சமும் இல்லை. ஒரு கேப்டனாக அடுத்து விளையாடவுள்ள வீரர்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இபோது அணியைத் தயார் செய்வது மட்டுமல்லாமல் அடுத்து தலைமையேற்கிற கேப்டனிடமும் ஒப்படைக்கும்படியான அணியைத் தயார் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.