தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி

தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி

புதுடெல்லி: இந்திய ரெயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியத்தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய ரெயில்வே அதிகாரி ஒருவர், ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு தலா ஒரு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதற்காக தனியாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெறவும் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் தனியார் மூலமாக இயக்கப்படும் ரெயில்கள் கூட்டம் குறைந்த அல்லது முக்கியமான சுற்றுலாத்தலங்களுக்கு இயக்க அனுமதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அதுபோன்ற வழித்தடங்களை அடையாளம் காணும் பணிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.