நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு!
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி.
நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற இருந்த நிலையில் மே 17ம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு.மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.கொரோனா தாக்கத்தை அடுத்து 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு.
தமிழகத்தின் இன்றைய நிலை..!
12 சிகப்பு மாவட்டங்கள்..
24 ஆரஞ்சு மாவட்டங்கள்..
1 பச்சை மாவட்டம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு.சென்னையில் 1,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 1,082 ஆக அதிகரித்தது.தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு; தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 சதவிதம் பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 9,615 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.ஒட்டு மொத்தமாக இதுவரை 1,29,363 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்திலும் உள்ளன.
தமிழகத்தில் இன்று 54 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்; இதுவரை 1,312 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!