வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது விபரீதம்!

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த புதுமண ஜோடியை பம்பை நதிக்கு அழைத்து சென்ற போட்டோகிராபர், அவர்களை தோனி ஒன்றில் அமர வைத்து கையில் ஒரு இலையை பிடித்தவாறு ஜோடி ஒருவரை ஒருவர் முத்தமிட கூறியுள்ளார்.

மணமகள் மணமகனை முத்தமிட சென்றபோது பேலன்ஸ் தவறி தோனி திடீரென தலை குப்புற கவிழ்ந்தது. இதில் தோனியில் இருந்த மணமக்கள் குப்புற விழுந்தனர். இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.