நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தீ விபத்து

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தீ விபத்து
Actor Kamalhassan marginally escapes from fire accident

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான கமல்ஹாசனின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவால் திடீரென தீப்பற்றியது. இதனால் அறைகளில் புகைமூட்டம் உண்டானது. இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை எனவும், தான் பத்திரமாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் "தீ விபத்து நிகழ்ந்த போது தான் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்ததாகவும். தான் பாதுகாப்பாக கீழே இறங்கியதாகவும் தனது பணியாளரும் எந்த பாதிப்புமின்றி வெளியேறியதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

Actor Kamalhassan marginally escapes from fire accident