பாக்ஸர் முரளி விவகாரம் - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாஸ்கர் முரளி, பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்கர் முரளிக்கும், சக கைதிகளுக்கும் இடையே 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் பாஸ்கர் முரளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புழல் சிறை தலைமை வாடர்ன் நாகராஜ் மற்றும் சிறை உதவியாளர் பழனிவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.