கோவை சிறுமி கொலை: பெற்றோரை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்

கோவை சிறுமி கொலை: பெற்றோரை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்

கவுண்டம்பாளையம்: கோவை துடியலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சந்தோஷ் குமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.