21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
Educational minister announces school holidays for childrens

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டார்.

அதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார், மேலும் ஏப்ரல் 21-ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ பயிற்சி வகுப்புகளோ நடத்தப்படகூடாது என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வு தேதிகள் பின்பு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைப்பதாலும், அனல் காற்று வீசுவதாலும் முன்கூட்டியே விடுமுறை விட முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

Educational minister announces school holidays for childrens