பிரான்ஸ் கட்டிட தீ விபத்து, 8 பேர் பலி

பிரான்ஸ் கட்டிட தீ விபத்து, 8 பேர் பலி

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 அடுக்கு கட்டிடம் ஒன்றின் 7வது மற்றும் 8 வது தளங்களில் இன்று அதிகாலை தீப்பிடித்து கொண்டது. இந்த தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி 5 மணிநேரத்திற்கு பின்னரே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் பெண் ஒருவரை கைது செய்தனர்.