ஜெயலலிதாவின் ஆத்மா பழிவாங்கி விட்டது

ஜெயலலிதாவின் ஆத்மா பழிவாங்கி விட்டது
Jayalalithaas soul punished Sasikalas family

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

இரட்டை இலை சின்னத்தை பெருவதற்காக டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இது ஒரு கிரிமினல் குற்றமாகும். எனவே தினகரன் கைது செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை தான்.

லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற்று ஓ.பி.எஸ். அணியை அழிக்க வேண்டும் என நினைத்தனர். அதை அம்மாவின் (ஜெயலலிதா) ஆத்மாவும், ஆவியும் பார்த்துக் கொண்டிருக்காமல் பழிவாங்கி விட்டது. இதனால் ஓ.பி.எஸ். அணி தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நேர்மையும், சத்தியமும், சட்டத்தின் நீதியும் வென்று விட்டது.

கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தை விரட்ட வேண்டும். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அம்மாவுக்கு (ஜெயலலிதாவுக்கு) தேவையற்ற மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அது "ஸ்லோ பாய்சன்" போன்றது. அதனால் எத்தகைய சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அது போன்று அம்மா மரணத்தில் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சந்தேகம் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

எனவே பேச்சுவார்த்தைக்கு இந்த 2 நிபந்தனைகள் மட்டுமே விதித்து இருக்கிறோம். ஓ.பி.எஸ். அணிக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு பொன்னையன் கூறினார்.

Jayalalithaas soul punished Sasikalas family