இந்திய கிரிக்கெட் வீரர் மீது மனைவி பரபரப்பு புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் மீது மனைவி பரபரப்பு புகார்
Mohammed Shami denies extra-marital affair

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர்.

நேற்று ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் சில ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார். அதில், ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் ஷேர் செய்துள்ளார்.

இதையடுத்து டிவி சேனலுக்கு ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், ஷமியின் காருக்குள் அவரது செல்போன் கிடந்ததாகவும், அதை எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்ததாக கூறியுள்ளார். மேலும் வெகுகாலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும் ஜகான் கூறியுள்ளார்.

முகமது ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றதாகவும் ஹசின் ஜகான் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மகளுக்காக பொறுமை காத்து வந்ததாகவும், ஆனால் ஷமியின் ஆபாச உரையாடல்களை பார்த்த பிறகு பொறுமை காக்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார்.

தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட தரம்சாலா சென்றுள்ள ஷமி, அங்கிருந்தபடி டுவிட்டரில் இந்த புகார் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது "எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை. எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. எனது புகழை கெடுக்க நடக்கும் முயற்சி இது. எனது விளையாட்டை சீர்குலைக்கும் முயற்சியும் கூட. இவ்வாறு ஷமி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

Mohammed Shami denies extra-marital affair